கோள்களின் கோலாட்டம் -1.14 கன்னி திரேக்காணத்தின் பலன்கள்.
கன்னி. 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– புஷ்பம் நிரம்பிய குடத்துடன் அழுக்கடைந்த வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட சரீரமுடையவளாகவும், வஸ்திரம், தனம் இவற்றின் சேர்க்கையை விரும்புவளாகவும் தந்தை வீட்டை விரும்புவளாகவும் உள்ளவள். புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம், கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திர«க்கானம் — எழுதுகோலை தரித்த கருப்புநிறமுள்ள வஸ்திரத்தை தலையில் சுற்றப்பட்டவனும், செலவு வரவு இரண்டையும் செய்கிறவனும், ரோமங்கள் அடர்ந்த சரீரமுடையவனும் ஆயுதம் தரித்தவனும் ஆவான்.…