அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 15

ஸ்திரி புருஷ நாடி பேதம் ….. மாதர்களுக்கு இடது கையிலும், புருஷர்களுக்கு வலது கையிலும், நாடியை பரீக்ஷிக்க வேண்டியதென்று சிவபெருமான் சிவகாமி சுந்தரியுடன் ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார். மாதர்களுக்கு இடது கரத்திலும், புருஷர்களுக்கு வலது கரத்திலும் நாடியை பரீக்ஷிக்க வேண்டியதற்கு ஹேது யாதுயென்று தேவியார் கேட்க சிவபெருமான் சொல்கின்றார். ஒமேரு புத்திரீ ஆடவர்களுக்கு நாபி ( கொப்பூழ், கத்தூரி ) கூர்மமானது ஊர்த்துவ முகமாயும், புருஷர்களுக்கு அதே முகமாயும் இருப்பதால் இருவர்களின் நாடிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகயிருக்கும், ஆகையால்தான் மாதர்களுக்கு…