ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 10
ஸ்ரீராமகிருஷ்ணர் பல சமயக் கொள்கைகளையும் அனுஷ்டித்துப் பார்த்தது அவைகளில் காணும் ஒரு மேம்பாட்டை எடுத்துப் போதிப்பதற்கு என எனக்குத் தோன்றவில்லை. இரவும், பகலும் எந்நேரத்திலும் அவர் ஆண்டவனைப்பற்றிய ஆனந்த நினைவில் மூழ்கிக் கிடப்பார் வைஷ்ணவ, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிகளைப் பின்பற்றி நடந்து ஆத்மிக சாதனங்களை மேற்கொண்டதால் அவர் தெய்வீக லீலைகளை அனுபவித்தார் அனால், குழந்தாய், குருதேவரின் சிறப்பான அம்சம் அவர் கொண்ட துறவு நிலையே. அது போன்ற இயல்பான துறவினை யாரேனும் கண்டிக்கிறார்களா? அவரது அணிகலம் துறவே.…