ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 16

சொற்களின் கூட்டம் ஒரு பெரியகாடு போன்றது. மனதை மயக்குவதற்குக் காரணமாகின்றது. ஆகையால் உண்மையறிவை நாடுபவர்களால் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றே நன்முயற்சியால் அறியப்படவேண்டும். அஞ்ஞானமாகிற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு பிரம்மஞானமாகிற மருந்தல்லாமல் வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் ஆவதென்ன? மந்திரங்களாலாவதென்ன? வேறு மருந்துகளாவெதென்ன? ஆகையால் எல்லாவிதமான வழிகளையும் கைக்கொண்டு நோய் முதலியவற்றினின்று விடுபட முயலுவது போல் பிறவித்தளையினின்றும் விடுபடுவதற்குத் தனக்குத்தானாகவே அறிவாளிகளால் முயற்சி செய்யப்படவேண்டும். முக்திக்கு முதல்படி நிலையற்ற பொருள்களில் தீவிரமான வைராக்கியம், பிறகு அகக்கரணங்களின் அடக்கமும், புறக்கரணங்களின் அடக்கமும், அதன்…

நாம் அடைய நினைப்பது

நாம் தெரிய நினைப்பதும், நாம் அடைய நினைப்பதும் முயற்சிக்காமல் கிடைக்காது. முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும். அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது. அந்த வைராக்கியம் கைவர பெற்றால் முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் அப்படி முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் அறிய நினைப்பது அடையநினைப்பது நமக்கு கைகூடும். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதாவது பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் நமக்கு தொடர்ந்த முயற்ச்சியும் அதை…