ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 21

ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும், வெளியேயும் நிரம்பி நிற்கிறேன். மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாகிப் பரிசுத்தமாய்ப் பற்றற்று, மாசற்றுத் திரிபற்ற நான் பரிசுத்தமாயிருக்கிறேன். குணங்களும் செயலுமின்றி நான் என்றமுள்ளவனாய்ப் பரிசுத்தனாய், அழுக்கும், ஆசையும் அற்றவனாய், மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய் எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன்.

தவறு

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை.. செய்த தவறு  வெளியே தெரியக்கூடாது என்றே பயப்படுகிறார்கள்.. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்.. சில தவறுகள் நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை சொல்லி தரும்.