விடை தேடி 4

ஆம், எத்தனைக்கெத்தனை திருப்தி அடைந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது, முக்கியமான விஷயம் திருப்தி அடைவதன் எண்ணிக்கை எத்தனை கூடினாலும் அத்தனைக்கத்தனை சந்தோஷத்தின் அளவும் கூடுகிறது. இது எனக்கு கிடைத்த விடை. இனி உங்களுக்கு கிடைத்த விடையையும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன். எந்த காரணமும் காரியமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்கும் கணத்தை நாம் கண்டு கொண்டிருந்தால் நான் சொன்ன விடையை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

கவனித்து கேட்டல்

இது ஒரு அழகான அற்புதமான கலை கண்டீப்பாய் நாம் அவசியம் கற்று கொள்ள வேண்டிய கலை நாம் இப்போது செய்து கொண்டிருப்பது எந்த விஷயத்தை கேட்டாலும் உடனே அதை எதோ ஒன்றுடன் ஒப்பு நோக்கிக்கொண்டோ அல்லது எடை போட்டுக்கொண்டோ தீர்ப்பு வழங்கிக்கொண்டோ ஒத்துக்கொண்டோ மறுத்துக்கொண்டோ இருந்து பழகியதால் எதையும் நாம் உள்ளபடி கவனித்து கேட்பதில்லை கவனித்து கேட்டால் ஒப்பு நோக்கோ எடை போடுவதோ தீர்ப்பு வழங்குவதோ ஒத்துக்கொள்வதோ மறுப்பதோ எதுவும் இருக்காது விஷயம் விஷயமாக மட்டுமே தெரியும்…