ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 11

எப்போதும் செயலாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். வேலையின்றி ஒரு போதும் இருத்தலாகாது. ஏனெனில் செயல் அற்ற சோம்பல் நிலையில் எல்லாவகைக்கெட்ட எண்ணங்களும் மனத்தில் உதிக்கும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் என்னிடம் கூறுவது உண்டு. கேள்வி — குருதேவர், தம்மை ஆன்மீக இலட்சியமாக ஏற்றுக் கொண்டோருக்குப் பிறப்பில்லை என்று” கூறியிருக்கிறார். பின்னால் சுவாமி விவேகானந்தர் சன்னியாசம் பெறாதவர்களுக்கு மோட்சமில்லை என்று கூறியுள்ளார். அங்ஙனமானால் இல் வாழ் வார்க்கு உய்யும் வழியாது? பதில் — குருதேவர் சொன்னதும் உண்மை, நரேந்திரர் ( சுவாமி விவேகானந்தர்…