தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள்.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள். விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும். அது போல நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ அங்கு கொண்டுபோய்விடும். கால வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாய் எங்கு சேர்த்தவேண்டுமோ அங்கு சேர்த்துவிடும் 

ஒரு எடக்கு மடக்கு கதை 1

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு,…