( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.2
7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன், ஸ்திரீகளுடைய வியாதியுடைவன். 8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன், உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன், திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன் மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம் சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர். 10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன். போகமுமிப்படியே,…