வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களுக்கு

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை அதன் இயல்பை புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம். முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்த புரிதல் இல்லாது போனால் இருப்பே இம்சையாகிவிடும்.

நம்ம புத்தி

நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர  நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…

திருச்சி சிவாவின் பார்வையில் வாழ்க்கை

வாழ்க்கை என்பது நம்மை ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு நகர்த்துகிறது. நாம் வெற்றி பெற்றதாகவும் வெற்றியாளராகவும் கருதப்படுகிறோம். அதற்குள் நாம் இழந்தவை ஏராளம், தொலைத்தவை ஏராளம், எதை தேடுகிறோம் என்பதையே அறியாமல் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு செல்லும் சாதாரண மனிதப்பிறவிகள்

ஒரு சின்ன கதை பகுதி 2

ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு,…

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் குடும்பம் என்றால் கணவன், மனைவி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. சமூகத்தின் பாதிப்பும் சேர்ந்தது தான் சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்காது. இந்த உலகத்தில் எந்த இருவருக்கும் இரு கட்சிகளுக்கும் எந்த இரு நாடுகளுக்கும் ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே தீர்மானமாய் சொல்ல முடியாது காரணம் அவரவர்களை பொறுத்த வரையில் அவரவர்கள் செய்வது தான் சரி.

யதார்த்தம்

நீங்கள் மிக நெருங்கியவராக நினைப்பவரும் உங்களை போலவே பிறிதொருவரை மிகநெருங்கியவராக நினைத்துக்கொண்டிருப்பார் இது தெரியும் போது நம்மால் ஜீரணிக்கமுடியுமா ஜீரணிக்க முடிந்தால் பாக்கியசாலிகள் இல்லாவிட்டால் வன்மம் வளரும் நமது வாழ்க்கை சீர்கெடும் ஏமாந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதிப்பு அடைவார்கள் அதனால் அது அப்படிதான் என்று எடுத்துக்கொண்டு போய்விடுதல் நல்லது யாருக்கும் தொல்லை இல்லை முக்கியமாய் நமக்கு தொல்லை இல்லை அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து…

வாழறது சுகம்

நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.

எல்லாம் ஒன்றுதானா

எல்லாம் ஒன்று தான், ஆனால் எதுவும் ஒன்றல்ல. இதை புரிந்துகொள்ள வாழ்வது சுலபமாகும் வாழ்க்கையும் சுகமாகும் இதை எப்படி புரிந்து கொள்வது பலரின் வாழ்க்கையை பார்த்து அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை படித்து, சிந்தித்து நமக்குள்ளும் நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் கேட்டுக்கொள்கிறேன்

மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்த

சேர்ப்பது அழிவிலும் முன்னேறுவது வீழ்ச்சியிலும் சேர்க்கை பிரிவிலும் வாழ்க்கை மரணத்திலும் முடியும் என்பதை அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் அப்படி புரிந்துகொண்டால் அதிக மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்திவிடலாம்

எதையும் மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத…

வாழ்க்கைங்கிறது

கோமு -ஒரு சந்தேகம் காமு -என்ன கோமு- வாழ்க்கைங்கிறது என்ன தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா இல்ல தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா? காமு- ரெண்டும்தான் கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு காமு-  இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட ஞாபகமே வராது துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும் இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க  கோமு -நான் கேட்டது மரணம்…