9 – தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும்.