கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 11
லக்கினாதிபதியும், 3 – க்குரியவரும் கூடி கேந்திரம் பெற்று 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் அழகு மிக்கவன் தர்ம குணம் உடையவன். வசதி வாய்ப்புக்களை பெறுவான். லக்கினாதிபதி பலம் பெற்று அந்த ராசியாதிபதி திரிகோணம் அடைய, 5 – க்குரியவர் பார்க்க, பாக்கியம் மிக்கவன். தனம் உள்ளவன் பூமி யோகம் உண்டு. 2, 3 – க்குரியவர் திரிகோணமடைந்து, சந்திரன் பார்க்க, தொடர்பு பெற, ஜோதிடம் சிற்பம், நன்னூல், கணிதம் இவைகள் அறிந்தவன். 2 –…