இப்படியும் கொஞ்சம் யோசியுங்க
ஓர் ஊரில் ஏழை ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன் , ”கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!” என்று புலம்பிவிட்டுப் போனான். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ”பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு…