ரொம்ப முக்கியமா சிந்திக்க வேண்டியது
ரீ கலெக்ஷன் ஆப் தாட்ஸ், மனிதர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்து யோசனைப் பண்ணி தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். மிருகத்திற்கு வருவது போல் கோபமோ, காமமோ சட்டென்று வருவதில்லை. கோபப்பட்டால் என்ன ஆகும்? தரம் தெரியாமல் இடம் புரியாமல், காமவயப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி, எப்போதும் யோசிக்காதவன் மிருகம். யோசனை பண்ணியதின் விளைவு, இன்றைய வாழ்க்கை, இன்றைய வளர்ச்சி.