அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 9
பிங்களா நாடி ….. யாகம் முதலிய புண்ணிய கருமங்கள் செய்கிறவர்களை பிங்கலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இருதய ஸ்தானத்தின் வலது பக்கமாய் சிரசிலிருந்து சஹஸ்ராசக்கிரத்தை ஆதாரமாய்க் கொண்டு அக்கினி மண்டலம் வரையிலும் வியாபித்து அர்சராதிமார்க்கமாய் தேவலோகத்திற்கு போகும்படி செய்யும் இதற்கு தேவபானமென்றும் சொல்லுவார்கள். இட நாடி ….. பிதுருலோக பிராப்தி அடையும் படியான கருமங்களை செய்தவர்களை இடகலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து பிரயாணமாகி இருதய ஸ்தானத்து இடது பக்கமாய் சிரசிலிருக்கும் சஹஸ்ராசக்கிரத்தை அடைந்து சந்திரமண்டலம் வரையிலும்…