ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 6
கேள்வி – நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தந்தை எனக் கருத முடியுமா? பதில் – ஆம், அவர் என் தந்தையாரும், தாயாரும், உடன் பிறந்தாரும், நண்பருமாவார். எனக்கு எல்லாம் அவரே, நீ அவர் உருவப் படத்தின் முன்னின்று பிரார்த்தனை செய்தால் அப்படித்தின் மூலம் உனக்குக காட்சி தருவார். அந்தப் படம் வைக்கப் பட்டிருக்கும் இடம் கோயிலாக ஆகிவிடும். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, ஸ்ரீராமகிருஷ் ணரின் பெயரை, மோனமாக ஜபிப்பது. ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நம்பிக்கை…