துக்கம் ஏது?
எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும். அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?
எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும். அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?
கணவன், மகன், உடல் இவையெல்லாம் மாயையே. அவை மாயையால் ஏற்பட்ட பந்தங்களே, அவற்றினின்றும் உன்னை நீ விடுவித்துக் கொண்டாலன்றி, நீ முக்தியடையமாட்டாய். இவ்வுடலின் மீதுள்ள பற்றும், இவ்வுடலையும் அதனுள் உள்ள ஆன்மாவையும் ஒன்றெனக் கருதும் மனப்பாங்கும், மறைய வேண்டும். குழந்தாய், இவ்வுடல் எனப்படுவது யாது? (எரித்த பின்) மூன்று கிலோ சாம்பலேயன்றி வேறல்ல. பின் அதைப்பற்றி ஏன் அவ்வளவு ஆடம்பரம்? உடல் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அதன் முடிவு மூன்று கிலோ சாம்பலே தான், இப்படியிருந்தும் மக்கள்…
மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.