( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.2

7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன், ஸ்திரீகளுடைய வியாதியுடைவன். 8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன், உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன், திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன் மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம் சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர். 10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன். போகமுமிப்படியே,…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன்.2

7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தனம், மனைவி, புத்திரன் இவர்களால் விடுபட்டவன் அதாவது இல்லாதவன், ஸ்திரீ ஜிதன், காமீ, வெட்கங்கெட்டவன், பிறருடைய சிநேகமுடையவன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் வக்கிரப் பார்வையுடையவன், அழகில்லாதவன், அபகீர்த்தியுடையவன், பிராம்ணநிந்தையுடையவன், ரக்தபீடை யடையவன், விசனமுடையவன். 9. ஜென்ம லக்கினத்திறகு ஒன்பாதாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அனேக வியாபாரமுடையவன், எப்போதும் அனேக மித்திரருடையவன், வெகு வேத சுருதிகளை அறிபவன், ஸ்திரிகளுக்கு இஷ்டமானதைச் சொல்லவறிந்தவன், பிரயமாகவும் பேசுபவன். 10. ஜென்ம…