அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 12அன்ன ரச விவரணம்
அன்ன ரச விவரணம் ….. மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம் பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும்.பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும்.நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது.ஊர்த்துவ காமி நாடிகள் …..…