அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 14

நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது…