பிரபஞ்ச சக்திகள் 1

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்புகள்  ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அண்டத்திலுள்ளதே பிண்டம்     பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமுமொன்றே   அறிந்து தான் பார்க்கும் போதே என்று சித்தர் பாடுகிறார்.…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு   8

ஆத்மா அறிவு மயமானது, பரிசுத்தமானது, உடல் மாம்ஸமயமானது. அழுக்கடைந்தது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறலாம்? ஸத்ரூபமாகிய ஆத்மா அழிவற்றது, அஸத்ரூபமாகிய உடல் தோன்றி மறைவது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக் கூறலாம்? மண்ணாலான குடம் முழுதும் எப்படி மண்ணாகவே இருக்கிறதோ அப்படி பிரம்மத்தாலான உடல் பிரம்மமே. ஆகையால் ஆத்மா என்றும் அனாத்மா என்றும் அஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவது…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 12

நம் குருதேவர் எழுதப் படிக்க அதிகமாக அறியாதவர். உண்மையில் வேண்டுவது கடவுளிடம் பக்தியே. ஏழையையும், பணக்காரனையும், கற்றவனையும், கல்லாதவனையும் அனைவரையும் விடுவிக்கும் பொருட்டே குருதேவர் இம்மண் மீது தோன்றினார். மலயமாருதம் இங்கு வீசுகின்றது. தன் வாழ்வுப் படகின் பாய்களை விரித்துவிட்டுக் குருதேவரிடம் அடைக்கலம் புகுவோர் நிச்சயம் சிறப்புற்றவரே. ஒவ்வொன்றும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று குருதேவர் தீர்மானித்து வைத்துள்ளார். அவரது பாதங்களில் யாரேனும் பூரணமாகச் சரண்புகுந்தால் எல்லாம் நேராக நடக்கும் வண்ணம் அவர் பார்த்துக் கொள்வார். நடப்பது ஒவ்வொன்றையும்…

நாம் அடைய நினைப்பது

நாம் தெரிய நினைப்பதும், நாம் அடைய நினைப்பதும் முயற்சிக்காமல் கிடைக்காது. முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும். அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது. அந்த வைராக்கியம் கைவர பெற்றால் முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் அப்படி முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் அறிய நினைப்பது அடையநினைப்பது நமக்கு கைகூடும். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதாவது பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் நமக்கு தொடர்ந்த முயற்ச்சியும் அதை…