ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

நிம்மதி

மகிழ்ச்சி வேண்டுமானால், பணம் சார்ந்ததாக இருக்கலாம்… ஆனால் நிம்மதி, என்றும் மனம் சார்ந்ததுதான்… வெளியில் தேடினால், கிடைக்கும் பொருளல்ல… மனதில் தேடினால், கிடைக்கும் உணர்வே நிம்மதி!…