ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 7
பரிசுத்தமான தெய்வப் பிறவியாக இருந்தபோதிலும் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறர் பொருட்டுத் துன்புற்றதையும், ஆயினும் அதே சமயம் தமது ஆனந்த பரவசத்தையும் தேவியினைப் பற்றிய தியானத்தின் இன்பத்தையும் ஒரு கணமும் இழக்காமல் வாழ்ந்ததையும் மட்டும் நீ நினைத்தாயானால், உன் துக்கமும், துன்பமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அவர் ஆனந்த சொரூபி. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர் பக்தி பரவசத்திலும், களிப்பிலும், சிரிப்பிலும், போதிப்பிலும், கதை சொல்வதிலும் ஈடுபட்டிருந்தார். எனக்குத் தெரிந்தவரை அவர் எதற்காகவும் கவலைப்பட்டதாகத்…