இப்பிறவி எடுத்தது

இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!! கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!! மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா, சேராது மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும். வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால் ஒரு தொழிலும் பலியாது.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 5

வயது கடந்தால் காமக்கிளர்ச்சி என்ன ஆகிறது? நீர் வற்றினால் குளம் என்ன ஆகிறது? பொருள் அழிந்தால் சுற்றம் என்ன ஆகிறது? உண்மை உணரப்பட்டால் ஸம்ஸாரம் என்ன ஆகிறது? ஸ்திரீகளின் நகில்களையும் நாபிப்பிரதேசத்தையும் பார்த்து மதிமயங்காதே, இவை மாம்ஸம், கொழுப்பு இவைகளின் விகாரமென்று அடிக்கடி எண்ணி மனதில் பொருட்படுத்தாமலிரு. நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தோம்? என் தாய் யார்? தந்தை யார்? இப்படித் தன்னுடைய பிறவித்தளைகளை நன்றாய் விசாரித்துப் பார்த்து இவையெல்லாம் கனவுக்கொப்பானவை எனக் கண்டு…

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..3

ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள் கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள் வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி, புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப் பார்க்கலாம்.. வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள், பாதகாதிபதியாக உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு  7

பாம்பு என்ற மதிமயக்கம் பழுதை என்ற அறிவால் எங்ஙனம் நீங்குமோ அவ்வாறு பரிசுத்தமான இரண்டற்ற பிரம்ம ஞானத்தால் மாயையானது அழிவுறும். பிரசித்தமான தத்தம் செயல்களால் ரஜஸ், தமஸ், ஸத்துவம் என்று நன்குணரப்பட்ட குணங்கள் அந்த மாயையைச் சார்ந்தவை. அவித்தை என்பது மனதிற்குப் புறம்பானதன்று. பிறவித் தளைக்கும் பிறவிச் சுழலுக்கும் காரணமான அவித்தை மனதேயாகும். அது (மனது) அழிந்தால் அவித்தை அனைத்தும் அழியும். ஆத்மா உடலை ஆள்வதாய் அதனுள் உறைவது, உடல் ஆளப்படுவதாய் வெளியே இருப்பது, அப்படியிருந்தும் மனிதர்கள்…