ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 11

நான் பிராணன் எனப்பட்டவனன்று, நான் ஐந்து வாயுக்களன்று, ஏழு தாதுக்களுமன்று, ஐந்து கோசங்களுமன்று, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் எனப்படுவையுமன்று, அறிவும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். எனக்கு விருப்பும், வெறுப்புமில்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, பேராசையும் மதிமயக்கமுமில்லை, கொழுப்பும் மாச்சரிய பாவனையுமில்லை, அறமும், பொருளும், இன்பமும், வீடும் இல்லை. அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 12அன்ன ரச விவரணம்

அன்ன ரச விவரணம் ….. மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம்  பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும்.பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும்.நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது.ஊர்த்துவ காமி நாடிகள் …..…