ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந் நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

பிரியமுள்ளவர்களிடத்து

நமக்கு பிரியமுள்ளவர்கள்  சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்