யோக மஞ்சரி.4 அனபா யோக பலா பலன்கள்
சந்திர லக்னத்திற்கு விரையஸ்தானமான 12 – வது ராசியில்இருக்கக்கூடிய குஜாதி பஞ்சக்கிரஹங்கள் மூலம்ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய பலா பலன்கள்சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் அங்காரகன் இருக்கும்பொழுது ஜனித்தவன் யுத்தசேவையில் பிரியமுள்ளவனாகவும்,குரோதியாகவும் அதாவது கோபியாகவும், திருஷ்டஸ்சோர ஜனப்பிரபுவாகவும்அதாவது துஷ்ட ஜனங்களுக்குத் தலைவனாகவும், தீரனாகவும் இருப்பான். இங்கே அங்காரகன் சந்திர லகனத்திற்கு 12 – வதுராசியில் இருப்பதற்குரிய பலன்களைப் பொதுவாகச்சொல்லியிருப்பினும் அந்தந்த ராசியின் தன்மையைஅனுசரித்தே பல நிர்ணயம் பண்ணவேண்டும்.உதாரணமாக சிம்ம சந்திரனுக்கு 12 – வது ராசியான கடக…