தர்க்க ரீதியில்

மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம் போல் காட்ட வல்லவன். அப்போது அவன் வேதாந்தம் பேசுவான், சாஸ்திரங்கள், புராணங்களை தனக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துவான். காரணம், மனிதன் உணர்ச்சிகளின் அடிமை. அவனின் உள் உள்ள சுயநலம் அப்படி அவனை ஆக்குகிறது

வியாபார லக்ஷ்ணங்ள்

இந்த சமுதாயத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பது என்ற பேச்சுக்கே இடமேயில்லை சட்ட விரோதம் என்பது வியாபார லக்ஷ்ணங்களில் ஒன்று. இதை புரியாதவர்கள் வியாபாரத்தில்  நியாயம், தர்மம், வியாபாரத்தில் வெளிப்படை சட்டத்திற்க்குட்பட்ட வியாபாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் உண்மையாகவே   பாவம்.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 12 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.. * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.. * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.. இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப…

நாட்டின் நிர்வாகம் 1

ஒரு நாட்டின் நிர்வாகம் எனும் அமைப்பு  பல கிளைகளை கொண்ட அல்லது பல வேர்களை கொண்ட மரம். அது இயங்கும் சூட்சமம் நாட்டின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கே சரியாக தெரியாது. மக்களின் ஆதரவினால் வந்தவர்களிடம் மக்களாகியவர்கள் வேறு எதையும் அல்ல இதையும் கூட எதிர்பார்க்க கூடாது. நாட்டின் நிர்வாக சக்கரத்தின் பற்களில் பல துறைகள் உள்ளது. அதன் இயக்கங்கள் நாம் நினைக்கும் தர்மம், நியாயம், உண்மை போன்றவற்றிற்க்கு வித்தியாசமான அர்த்தங்களை கொண்டிருக்கும்.