ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 12
நம் குருதேவர் எழுதப் படிக்க அதிகமாக அறியாதவர். உண்மையில் வேண்டுவது கடவுளிடம் பக்தியே. ஏழையையும், பணக்காரனையும், கற்றவனையும், கல்லாதவனையும் அனைவரையும் விடுவிக்கும் பொருட்டே குருதேவர் இம்மண் மீது தோன்றினார். மலயமாருதம் இங்கு வீசுகின்றது. தன் வாழ்வுப் படகின் பாய்களை விரித்துவிட்டுக் குருதேவரிடம் அடைக்கலம் புகுவோர் நிச்சயம் சிறப்புற்றவரே. ஒவ்வொன்றும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று குருதேவர் தீர்மானித்து வைத்துள்ளார். அவரது பாதங்களில் யாரேனும் பூரணமாகச் சரண்புகுந்தால் எல்லாம் நேராக நடக்கும் வண்ணம் அவர் பார்த்துக் கொள்வார். நடப்பது ஒவ்வொன்றையும்…