அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 36

பாலியம், கௌமாரம், யவ்வனம், வார்த்திகம் என்கிற அவஸ்தைகளுக்கு தக்கின பிரகாரம் நாடிகளின் சலனம் குறைந்து கொண்டே வரும். சுராதி ரோகங்கள் உண்டாகும் போது நாடிகளின் சலனமானது பேதப்படும். நாடிகள் வாயு சஞ்சாரத்தினால் சரீரத்தில் ரத்தத்தை வியாபிக்கச் செய்கின்றது. அந்த ரத்ததோஷத்தினால் அந்த நாடிகளில் ரத்தபரவல் பந்தகித்தால் அப்பொழுது நாடி சஞ்சரமாயும், வேகமாயும், துர்பலமாயும், க்ஷீணமாயும் நடக்கும். இரத்தத்தால் உஷ்ணமுண்டானால் நாடியானது அதிவேகத்துடன் சஞ்சலமாய் நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 35

நாலு முதல் ஏழு வருஷ சலனம் ….. நாலு வருஷம் முதல் ஏழு வருஷம் வரையிலும் ( 90 ) தகுதி மணி நேரத்தில் நாடி அடிக்கும். ஏழு வருடம் முதல் எண்பது வருடம் வரையிலும் நாடி சலனம் ….. ஏழு வருடம் முதல் பதினான்கு வருடம் வரையிலும் ( 85 ) தகுதியும், பதினாறு வருடம் முதல் முப்பது வருடம் வரையிலும் எண்பது தகுதியும், முப்பது முதல் ஐம்பது வருடம் வரையிலும் ( 75 )…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 32

மலமூத்திர பந்தன விஷ சிகாரோக நாடி லக்ஷணம் ….. மல மூத்திரத்தை அடக்குகிறவனது நாடி அதிவேகமாய் நடக்கும் விஷ சிகாரோகத்தில் தவக்களை நடையைப் போல் நடக்கும். காமிலா மூத்திரகிருச்சிரரோக நாடி லக்ஷணம் ….. காமிலா ரோகம், மூத்திரகிருச்சிரம் இவைகளில் நாடி கரிஷ்டமாய் நடக்கும். வாத ரோக சூலரோக நாடி லக்ஷணம் ….. வாத ரோகம், சூலரோகம், இவைகளில் நாடி வக்கிரமாய் நடக்கும். பித்த ரோக ஆமசூல நாடி லக்ஷணம் ….. பைத்திய ரோகத்தில் நாடி அதிக சுவாலையாயும்,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 31

கிரஹனி அக்கினிமாந்த தோஷ நாடி லக்ஷணம் ….. மந்தாக்கினி உடையவனது நாடி க்ஷீணித்து அன்னத்தைப் போல் நடக்கும். அக்கினி மாந்தியம், கிரஹனி ரோகம் இவைகளில் நாடியானது பாதத்தில் அன்னத்தைப் போலும், அஸ்தத்தில் மண்டூகத்தைப் போலவும் நடக்கும். விளம்பிகா ஆமாதிசார மலபேத கிரஹணி தோஷ நாடி லக்ஷணம் ….. நாடியானது மலபேதத்தில் சாந்தமாயும் கிரஹணிரோகம், அதிசாரம் இவைகளில் தேஜோவிஹீனமாயும், விளம்பிகை என்கிற ரோகத்தில் படகைப்போலவும், அமாதிசாரத்தில் தொங்குகிறதுப்போலும் நாடி நடக்கும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 25 

திரவ பதார்த்தம் புசித்தவனது நாடி ….. பசபசப்புள்ள பதார்த்தங்கள் புசித்தவனது நாடி கடினமாயும் கடின பதார்த்தங்களை புசித்தவனது நாடி கோமளமாயும் இரண்டும் கலந்தவனது நாடி இரண்டும் சார்ந்துமாய் நடக்கும். வேறு விதம் ….. புளிப்பாகிலும் அல்லது புளிப்பு மதுரம் இவை இரண்டும் கலந்த பதார்த்தங்களை புசித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், அவல், வறுத்த பதார்த்தங்கள் புசித்தவன் நாடி ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும். காய்கறிகள், கிழங்குகள் திண்பவனுக்கு நாடி லக்ஷணம் ….. பூசணிக்காய், முள்ளங்கி முதலிய கிழங்குகள் இவைகளை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 16

ஜீவசாக்ஷினி நாடிகதனம் ….. மூலத்தின் நாடிக்கு ஜீவசாக்ஷி என்று பேர். அதன் கதி விசேஷத்தால் ரோகியின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியது. நாடி நாமங்கள் ….. நாடிக்கு – ஸ்நாயுவென்றும், பசயென்றும் ஹிம்ஸ்ரயென்றும், தமனியென்றும், தாமனியென்றும், தரயென்றும், தந்துகி என்னும் ஜீவிதக்கியயென்றும் ப்ரியாய நாமங்கள் உண்டு. நாடியின் குறிகள் ….. ரோகியின் மணிபந்தத்தில் தாதுவை வைத்தியன் பரீக்ஷிக்கும்போது தர்ஜனி விரல் (ஆள் காட்டி விரல்) அசைகிற நாடி, வாதமென்றும், நடுவிரலில் அசைகிற நாடி பித்தமென்றும், அநாமிகை அதாவது…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 15

ஸ்திரி புருஷ நாடி பேதம் ….. மாதர்களுக்கு இடது கையிலும், புருஷர்களுக்கு வலது கையிலும், நாடியை பரீக்ஷிக்க வேண்டியதென்று சிவபெருமான் சிவகாமி சுந்தரியுடன் ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார். மாதர்களுக்கு இடது கரத்திலும், புருஷர்களுக்கு வலது கரத்திலும் நாடியை பரீக்ஷிக்க வேண்டியதற்கு ஹேது யாதுயென்று தேவியார் கேட்க சிவபெருமான் சொல்கின்றார். ஒமேரு புத்திரீ ஆடவர்களுக்கு நாபி ( கொப்பூழ், கத்தூரி ) கூர்மமானது ஊர்த்துவ முகமாயும், புருஷர்களுக்கு அதே முகமாயும் இருப்பதால் இருவர்களின் நாடிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகயிருக்கும், ஆகையால்தான் மாதர்களுக்கு…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 14

நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 12அன்ன ரச விவரணம்

அன்ன ரச விவரணம் ….. மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம்  பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும்.பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும்.நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது.ஊர்த்துவ காமி நாடிகள் …..…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் —11

நாடிக்கியானம் ….. சீவ நிலை சில இடத்தில் நாபியைப்போல் சக்கிராகாரமாயும், சில இடங்களில் ஆமாதிசயம் முதலிய கோசாகாரமாயும், சில இடங்களில் இருதயாதி ஜீவகிருஹங்களாகவும் இருக்கும். இந்த சரீரத்தில் ஜீவன் தனது ஆகாமி சஞ்சித பிராப்தத்திற்கு சரியாக வசித்து இருப்பான். சிலந்தை தான் பிள்ளையை கூண்டில் விடாது வசிக்கிறதுப்போல் இந்த ஜீவன் பஞ்ச பிராணங்களுடன் கலந்து வசித்திருக்கிறான். யாராவது மேற்கூறிய ஜீவனை யோகாப்பியாசத்தால் பரப்பிரம்மமாக அறிகின்றார்களோ அவர்கள் காலபாசத்தில் சிக்காமல் வாழ்வார்கள். பிராணவாயு இருப்பிடம் ….. நாபி, தாது,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 8

திரி நாடி ஸ்தானம் ….. இளா என்கிற நாடி தேகத்தின் இடது பக்கத்திலும், பிங்களா என்கிற நாடி வலது பக்கத்திலும், சுஷ்ம்னா என்கிற நாடி இவைகளுக்கு மத்தயிலும் இருக்கின்றது . இந்த மூன்று நாடிகளிலும் வாயுவு சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இளா பிங்களா நாடி சுரூபம் ….. இளா என்கிற நாடி சங்கைப் போலவும், சந்திரனைப் போலவும் பிரகாசித்துக் கொண்டு சுஷ்ம்னா என்கிற நாடிக்கு இடது பக்கத்தில் இருக்கின்றது. பிங்களா என்னும் நாடி கறுப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தையுடையதாய்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 6

நாடிகளின் குணங்கள் ….. காதுகளில் வியாபித்திருக்கும் நாடிகள் ஓசையை அறியும்படியானவை, கண்களில் வியாபித்திருக்கும் நாடிகள் ரூபத்தை அறியும்படியானவை, மூக்குகளில் இருக்கும்படியான நாடிகள் வாசனையை அறியும்படியானவை, நாவில் வியாபித்திருக்கும் நாடிகள் ரசத்தை அறியும்படியானவை, சர்மத்தில் வியாபித்திருக்கும் நாடிகள் ஸ்பரிசத்தை அறியும்படியானவை, இருதயம் முகம் இந்த இடங்களில் வியாபித்திருக்கும் நாடிகள் பேசுதற்கு உபயோகமானவைகள். மனது புத்தி இவை இரண்டும் இருதய ஸ்தானத்திலிருக்கின்றன. புரீத்தி என்னும் நாடியில் மனது லீனமானால் மனிதனுக்கு தூக்கம் உண்டாகும். மேற்கூறிய பதினான்கு நாடிகளின் நாமங்கள் அல்லாது…