வெற்றி அடைய

நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன் அப்படி என்னை பார்க்கும் போது நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன் அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன் எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன் என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 14

குழந்தாய் வருத்தப்படாதே, நம் குருதேவரே ம‍கேசுவரரும், மகேசுவரியும், அவரே எல்லாத் தெய்வங்களின் உருவமும் ஆவார். அவரே எல்லாத் தெய்வீக மந்திரங்களின் வடிவமும் ஆவார். எல்லாத் தேவர்களையும், தேவியர்களையும் அவர் மூலமாக வணங்கலாம் அவரை மகேசுவரர் என்றும் மகேசுவரி என்றும் அழைக்கலாம். வெறும் புத்தகப் படிப்பினால் ஒருவர் நம்பிக்கை பெறமுடியுமா? அதிகமாகப் படிப்பது குழப்பத்தை உண்டாக்கும் சமய நூல்களைப் படித்தறிந்து, கடவுள் ஒருவரே சத்தியம் என்பதையும், உலகம் மித்தை என்பதையும் உணரவேண்டும் என அடிக்கடி குருதேவர் சொல்வார்.

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…