தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 2
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம். மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.. அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள். சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள். தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள். இப்படியெல்லாம் இருக்கமுடியாது…