கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம்.3
மிதுன ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை (அ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு. இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ (அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களும் மாரகத்தை தரக்கூடியவர்களே. இந்த மிதுன லக்கினகாரர்களுக்குப் பெரும் பாவியான குரு பகவான் தனது வீட்டிற்கு மறைந்து இருப்பினும் (அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம்…