அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 22
நாடிகளை மிகவும் நுட்பமான புத்தியுடன் அவைகளின் போக்கை அறிந்து வியாதிகளின் குணபேதங்களை தெரிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாடி ஞானத்தை செவ்வையாய் தேவர்களுக்கும் தெரிந்துக் கொள்வது கஷ்டமென்றால் மானிடர்கள் தெரிந்து சிகிச்சை செய்ய எவ்வளவு கஷ்டமாயிருக்கும். ஆகையால் நாடிகளையும் அதன் சப்தங்களையும் மிகவும் சூஷ்மபுத்தியுடன் தெரிந்துக்கெண்டு வியாதியின் குணத்தை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டியது. மருத்துவரின் கடமை ஆகும். அபிகாதாதி ரோகங்களின் நாடி லக்ஷணம் பளுவை எடுக்குதல், பிரவாகத்தில் அடித்துக்கொண்டு போகுதல் மூர்ச்சை சம்பவித்தல், பயமுண்டாகுதல்,…