பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 5 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது? .

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.1

பரிவேடனுடைய துவாதச பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் வித்துவான், சத்தியத்துடன் கூடியவன், சாந்தமுடையவன், தனமுடையவன், புத்திரனுடையவன், சுசியுடையவன், கொடையாளி, குரு அன்புடையவன். 2. ஜென்ம லக்கினத்தில் இரண்டாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் குணத்தில் கடவுள் எனப்படுபவன், பிரபு ரூபமுடையவன், போகி, சுகி, தர்மபாராயணம் செய்பவன், பிரபு ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஸ்திரீ வல்லபவன், நல்ல சுரூபமும் அங்கங்களுடையவன், தேவதைகளிடம் அன்புடையவன், சுயஜன சேர்க்கையுடையவன், வேலையாளுடையவன், குருபக்தியுடையவன். 4.…