ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 35
ஒரு நாள் ஒரு பெண்மணி, அன்னையாரை அணுகித் தன் பெண்ணை மணக்கப் பணிக்குமாறு வேண்ட, அதற்கு அன்னை அளித்த பதிலாவது வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு அடிமையாக எப்போதும் அவனது சொற்படி நடந்து கொண்டிருப்பது துன்பம் தரத்தக்கதல்லவா? பிரம்மசாரிணியாக வாழ்வதில் சிறிது ஆபத்து இருப்பினும், ஒரு பெண் இல்வாழ்வு நடத்த விரும்பாவிடில், அவளை வலிந்து புகுத்தி, ஆயுள் முழுவதும் உலகப்பற்றுக்கு உட்படுத்தக் கூடாது. துறவு வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்களை எல்லாம், பிரம்மசரிய வாழ்வு நடத்துமாறு ஊக்குவிக்க வேண்டும்.…