சித்த-மருத்துவத்தில் துத்தி (Abutilon indicum)
துத்தி துத்தி இலைகளைத் துவையல் செய்து சாப்பிடுவது அஜிரணித்திற்கு மருந்தாகும். மேலும் இது முலநோய்க்கும் மருந்தாகிறது. துத்தி இலைகளை நெய்யில் வதக்கித் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூலம் குணமாகும். இலைகளைக் காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வெள்ளைபடுத்தல் குணமாகும். இலையைக் கஷாயம் செய்து கொப்பளிக்க பல்வலி குணமாவதுடன் ஈறு வீக்கமும் வடியும். இலைகள் மற்றும் தண்டுகளில் வைட்டமின் சி (31.1 மி.கி. /100 கிராம்) அடங்கியுள்ளது. துத்திப்…