நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 20

நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான் செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான். பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன், நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை, ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை. துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை, ஏனெனில் நான் மனதன்று. உபநிஷதம் கூறுகிறது, அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன்,…

30 -ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.

பின் பற்ற வேண்டிய விஷயங்கள்

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.