இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும். இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அதாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும். கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் பாராயணம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும். யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது.…