7 – ஆம் பாவமும் அதன் பலன் அறியும் மார்க்கமும். P.ATHMA
12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும்…