ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13

ஒரு மனிதனுக்கு உலகத்தில் எங்குமே எவ்வித உறவினரும் இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மகாமாயை அவனை ஒரு பூனையை வளர்க்குமாறு செய்து உலக பந்தத்தில் சிக்க வைத்துவிடுவாள். அவளது விளையாட்டு அவ்வாறானது என்று குரு தேவர் சொல்வது வழக்கம். கேள்வி – நான் ஏன் குருதேவரின் தரிசனம் பெறுவதில்லை? பதில் – தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவா. எல்லாம் தக்க காலத்தில் ஏற்படும். முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டவனை உணர எத்தனை , தவம் புரிந்தனர் என்பது தெரியுமா?…

ஸ்ரீ குரு கீதை

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை சிருஸ்டி, ஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி பூஜைக்கு மூலம் குருவின்…

பின் பற்ற வேண்டிய விஷயங்கள்

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.