ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13
ஒரு மனிதனுக்கு உலகத்தில் எங்குமே எவ்வித உறவினரும் இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மகாமாயை அவனை ஒரு பூனையை வளர்க்குமாறு செய்து உலக பந்தத்தில் சிக்க வைத்துவிடுவாள். அவளது விளையாட்டு அவ்வாறானது என்று குரு தேவர் சொல்வது வழக்கம். கேள்வி – நான் ஏன் குருதேவரின் தரிசனம் பெறுவதில்லை? பதில் – தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவா. எல்லாம் தக்க காலத்தில் ஏற்படும். முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டவனை உணர எத்தனை , தவம் புரிந்தனர் என்பது தெரியுமா?…