தூமனுடைய துவாதச பாவ பலன்.1 பராரை ஹோரை ) 6-வது அத்தியாயம்.

தூமனுடைய துவாதச பாவ பலன். 1. ஜென்ம லக்கினத்தில் தூமனிருந்தால் ஜாதகன் வெகு ரோஷமுடையவன், சூரன், அழகான கண்ணுடையவன்,தடையில்லாதவன், தயையில்லாதவன், சர்வ முடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், ராஜ்ஜியத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன் ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் அறிவாளி செளரியமுடையவன் இஷ்டமாய்ப் பேசுபவன் ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தனத்தைச் சம்பாதிப்பவன், தனவான், மனைவி முதலியவர்களை இழந்து மனசில் எப்போதும் துக்கமுடையவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன்…

தனவான்

எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 இலக்கினம் முதற்கொண்டு இலக்கினாதிபதியிருக்கும் வீடாகவும் எண்ணிக் கண்ட தொகையை இலக்கினாதிபதியைத் தொட்டு எண்ணி வருகையில்அந்த வீடு பாவர்வீடாகில் தரித்திர யோகமென்றும், சுபர்கள், வீடாகில் தனவானாகவுமிருப்பன். ஜன்ம லக்கினத்திற்கு இரண்டு, ஐந்து பன்னிரண்டு இந்தவிடங்கள் சுபர் வீடாகில் தனவானுமாவான். ஜன்மத்தில் சனியும், நாலாமிடத்தில் சந்திரனும், ஏழாமிடத்தில் செவ்வாயும், பத்தாமிடத்தில் சூரியனும், குருவும், புதனும், சுக்கிரனும் இவர்கள் கூடி ஒரு வீட்டில் நிற்கப் பிறந்த ஜாதகன் இராஜயோகத்தை அனுபவிப்பான். எட்டு,…