ஸ்ரீ சங்கரரின் ஞானம் 11

வைராக்கியத்தின் பயன் ஞானம், ஞானத்தின் பயன் விஷய சுகங்களை நாடாமல் ஆத்மானந்தத்தையனுபவித்தல், அதனால் விளைவது பரம சாந்தி. அகங்காரத்தில் வேரையறுத்து அதை எரித்துச் சாம்பலாக்குவது உண்மையான ஞானத்தின் இயல்பு. அப்பொழுது செயல் புரிபவனும் இல்லை. செயலின் பலனை அனுபவிப்பவனும் இல்லை.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 7

மற்ற சாதனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஞானம் தான் மோக்ஷத்திற்கு நேரான சாதனம் என்பது தெளிவாகின்றது. நெருப்பில்லாமல் எப்படிச் சமையல் இயலாதோ அப்படி ஞானமில்லாமல் மோக்ஷம் இயலாது. தேத்தாங்கொட்டைப் பொடியானது தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டுக் கீழே படிந்து விடுவது போல் ஞானமானது அஞ்ஞானத்தால் அழுக்கடைந்த ஜீவனை அப்பியாசத்தால் அழுக்கற்றவனாக்கி விட்டுத் தன்னையும் மறைத்துக் கொள்ளுகிறது.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 6

அந்தக்கரணம் உள்ளவரை வெளி விஷயங்கள் புலனாகின்றன. அந்தக்கரணமில்லையேல் வெளி விஷயங்கள் இல்லை. அறிபவன் அறிபவனாக எப்பொழுதும் ( விஷயங்கள் இல்லாத பொழுதும் ) இருக்கவே இருக்கிறான். துவைதத்திற்கு இருப்பில்லை. நான் பரிசுத்தமான ஆத்மா என்று ஒருவன் உணரும் பொழுது தான் உடல் என்ற நினைவு அழிந்து போகிறது. ஒருவன் விரும்பாவிடினும் அந்த ஞானம் அவன் மனிதன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவித்து விடுகிறது.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 5

நான் மாறுபடாதவன், எனக்கு உருவம் இல்லை, குற்றமும் குறைவும் என்னிடமில்லை, நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது. எனக்கு குணமும் இல்லை செயலுமில்லை, நான் என்றுமுள்ளவன், சுதந்திரமானவன், அழியாதவன், நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது

ஸ்ரீசங்கரரின் ஞானம் 4

நான் மாசற்றவன், அசைவற்றவன், அளவில்லாதவன், புனிதமானவன், அழிவற்றவன், சாவில்லாதவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமானகளால் கூறப்படுகிறது. நான் நோயற்றவன், எதிலும் பிடிபடாதவன், துவந்துவங்களுக்கப்பாற்பட்டவன், எங்கும் நிறைந்தவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஞானம் அப்படின்னா என்ன

ஞானம்ன்னா என்ன தனக்குள் உண்டான அறிவுக்கு ஞானம்ன்னு பேர் முதிர்ந்த அனுபவ அறிவுக்கு ஞானம்ன்னு சொல்லலாமா கூடாது உனக்குள் உள்ள இருந்து அறிவு வரணும் அப்படி வந்தா மட்டுமே ஞானம் அப்படி வருமா வந்துருக்கே உதாரணத்துக்கு ரிஷிகள், யோகிகள்

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 2

இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன், குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒரு வகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வ பலம் ஆகியவை சிறந்து விளங்கும் படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம். விருச்சிக லக்கினத்திற்கு 2, 5க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் ஆதிபத்திய காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில்…

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும். இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அதாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும். கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது  மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் பாராயணம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும். யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது.…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்கினம் 3

எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு, மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள். அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுமி கடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள். சிலருக்கு இரண்டு தாரம் ஏற்படுகிறது. இரண்டாம் தாரம் திருப்திப்படுவதில்லை. சிலர் சின்னவீடு வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு. பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும். இவர்கள் பெண்…

யோக பாதை.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது. ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது. குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண…

ஸ்ரீ குரு கீதை

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை சிருஸ்டி, ஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி பூஜைக்கு மூலம் குருவின்…