பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன். 1

1. ஜென்ம லக்கினத்தில் விதீபாதனிருந்தால், ஜாதகன் துக்கத்தினால் அங்கபீடையுடையவன், குரூரமுடையவன், கொலை செய்பவன் மூர்க்கன், பந்துஜன துவேஷி ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கிரண்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அதிக பித்தமுடையவன், போகி, வீண் விசாரமுடையவன், ஆராய்ச்சியுடையவன், பிரசங்கியாவன். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூனறாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தயையில்லாதவன், செய்நன்றியுடையவன், துஷ்டாத்துமா, பாபச்செய்கையுடையவன், ஸ்திரமான ( நிலையான ) அறிவுடையவன், சந்தோஷி, தாதா ( அதாவது கொடையாளி ) தனசம்பாதனையுடையவன், ராஜ வல்லவனாவன், சேனாநாயகனாவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 11

எப்போதும் செயலாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். வேலையின்றி ஒரு போதும் இருத்தலாகாது. ஏனெனில் செயல் அற்ற சோம்பல் நிலையில் எல்லாவகைக்கெட்ட எண்ணங்களும் மனத்தில் உதிக்கும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் என்னிடம் கூறுவது உண்டு. கேள்வி — குருதேவர், தம்மை ஆன்மீக இலட்சியமாக ஏற்றுக் கொண்டோருக்குப் பிறப்பில்லை என்று” கூறியிருக்கிறார். பின்னால் சுவாமி விவேகானந்தர் சன்னியாசம் பெறாதவர்களுக்கு மோட்சமில்லை என்று கூறியுள்ளார். அங்ஙனமானால் இல் வாழ் வார்க்கு உய்யும் வழியாது? பதில் — குருதேவர் சொன்னதும் உண்மை, நரேந்திரர் ( சுவாமி விவேகானந்தர்…