அனுபவ மொழிகள் 2

கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது. கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால், இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.

வளர்ச்சி

வளர்ச்சி விளைவுகளை பொருத்தது அல்ல செயல்களை பொருத்தது. வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையை உயிரூட்டும் சாதனம் தத்துவம் ஆனால் அது கூட பல மாறுபாடுகளை தனக்குள் கொண்டுள்ளது. அது மனிதனின் சுபாவத்திற்க்கு ஏற்றபடி மாறுபட்ட உணர்ச்சிகளையும், அர்த்தங்களையும் தரவல்லது. ஏதும் விளையாத பாலைவனம், பாலைவனம் வளர்ச்சியுற்றதா, இல்லை கங்கை நதியோரம் உள்ள செழிப்பான மலர் சோலைகளும், தோப்புகளும் வளர்ச்சியுற்றதா அனுமானிக்க முடிவதில்லை, ஏனென்றால், கதிரவன் தனது கடுமையை பாலைவன மணலில் எத்தனையோ காலங்கள் செலுத்தினாலும் அந்த மணல்…

குணம் – செயல்

” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம். தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற, சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார். வந்தவர்களுக்கோ…