வாழ்க்கையில் நிர்பந்தம்

யாரோடும், எதனோடும் ஒட்டாத தன்மையோடு இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம உணவுக்கும், உடைக்கும், வம்ச விருத்திக்கும், அடுத்தவங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது தனிப்பட்ட அப்படிங்கற விஷயமே இல்லாதா போயிருது நம்முடைய அந்தரங்கத்துடன் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு ஒரு சூழ்நிலையில் நாம் அடுத்தவரை சார்ந்து இருத்தல் என்பது நிர்பந்தம் இதை புரிந்து கொண்டால் வீண் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தும் பழக்கம் நம்மை விட்டு சென்றுவிடும் அது சென்று விட்டாலே சுற்றம்…

பிரம்மச்சர்யம் என்றால்

பிரம்மச்சர்யம் என்றால் அது ஒரு மன நிலை, உடல் மட்டும் ஒரு பெண்ணை தீண்டாமல் இருந்துவிட்டால் மட்டும் பிரம்மச்சர்யம்ஆகாது , மனம் ஒத்துழைக்க வேண்டும், மனம் ஒத்துழைக்க சூழ்நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் அமைய வேண்டும், அப்படி இல்லாவிட்டால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனம் சலனப்படும், மனம் சலனப்பட்டால் உறக்கம் போகும், உறக்கம் இல்லாத போது உடல் உபாதை உண்டாகும், உடல் உபாதை பிரம்மச்சரியத்தை முறிக்கும். இது மாலையிட்டு விரதம் இருக்கம் ஐயப்ப பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இல்லறத்தான்…

எழுதாத விதி

மனிதன் எந்த சூழ்நிலையிலும் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட வேண்டும் என்பது எழுதாத விதி விதியை மாற்றி எழுதினால் மனிதன் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட கூடாது முக்கியமாக தான் மதிக்கத்தக்க விலை மதிப்பில்லாதது எனும் ஒன்றை இழந்துவிட கூடாது.

சூழ்நிலை

சூழ்நிலை என்பது காலத்தின் வசம் அந்த காலம் எப்போதும் நமக்கு அனுகூலமாய் இருக்காது. செய்ய நினைத்த, செய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியாமல் போய்விடும். செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். யாருமே இதற்க்கு விதிவிலக்கல்ல. செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். வேண்டுமானால்  கால அளவுகள், செய்ய வேண்டிய காரியங்கள் மாறுபடலாம் மற்றபடி இதிலிருந்து யாரும் தப்பியது இல்லை  அவ்வளவுதான்.

உறவு சிக்கல் ஏற்படும் போது 2

நிலை 1: அதிர்ச்சி நாம் கொண்டிருக்கும் அன்பு திடீர் என சம்பந்தப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படும் போது முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு அதிர்ச்சி ஆகும். அதனுடன் தொடர்ந்து ஆச்சர்யமும் சில சமயங்களில் பயம் கூட ஏற்படும். இதனால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனும் உணர்வு தான் பயமாக வெளிப்படும். இந்த சூழ்நிலை ஏற்படும் போது மன பயிற்சிக்காக தியானம் செய்யுங்கள். உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்

26 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலவித இன்னல்களுக்கு இடையே சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் பெறுவார்கள். இள வயதில் கஷ்டமான சூழ்நிலையை உடையவர்கள். குறைவான கல்விப் பயிற்சி உடையவர்கள். என்றாலும் அனுபவக் கல்வி அதிகமாக உடையவர்கள், எப்படியும் பிரபலமடைந்து உயர்ந்து விடுபவர்கள் எனலாம்.