அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 10
பிரம்ம லோக பிராப்திக்கு வேண்டிய உபாசனை செய்தவர்களை சூஷ்ம ரூபமாகிய சுஷம்னா நாடி மூலாதாரத்திலிருந்து இடகலை பிங்கலையின் மத்தியமாக சூக்ஷ்மரூபத்துடன் நடுமுதுகிலுள்ள வீணாதண்டமென்கிற எலும்பின் மார்க்கமாய் சஹஸ்ராரத்தையும் பிரம்மாந்திர மூலமாய் சூரியமண்டலம் வரையிலும் வியாபித்து பிரம்மலோகத்தை அடையச் செய்யும். பர பிரம்ம நிலை ….. சகல பிரபஞ்சாத்மக பரஞ்சோதி சொரூபியாகிய பர பிரம்மம் இந்த சுஷம்னா நாடியில் வசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடி அநேக மார்க்கங்களை உண்டாக்கி அனேக முகங்களுடன் வியாபித்திருக்கும். இந்த நாடிதான் சுத்த பரப்பிரம்மத்திற்கு…