ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 8

பொருள்,சுற்றம், யெளவனம் முதலியவற்றைப் பற்றி கர்வம் கொள்ளாதே, காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய்விடும். மாயாமயமான இவ்வனைத்தையும் விட்டு பிரம்மபதத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக. காமத்தையும், கோபத்தையும், பேராசையையும், மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை ஸ்வரூபத்தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்த துன்பத்திற்காளாகிறார்கள். சத்துருவென்றும், மித்திரனென்றும், புத்திரனென்றும் உறவினனென்றும், வேற்றுமையைப் பாராதே. விஷ்ணுபதத்தை நீ விரும்பினால் யாரிடத்தும் பகைமையும், நட்பும் பாராட்டாமல் எல்லோரையும், எல்லாவற்றையும் சமமாகப்பார். 

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 1

பகலும், இரவும், மாலையும், காலையும், பனிக்காலமும், இளவேனிற்காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது, வயது கழிகிறது, என்றாலும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசைமட்டும் மனிதனை விடுவதில்லை. மதிமங்கியவனே! மரண சமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது. ஆகையால் கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி. எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாயிருக்கிறானோ அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு…

வாழ்வென்பது

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.. தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி.. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்   இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.. போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.. அதிகமான சிக்கனம் அவசியமில்லை. . மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே… உயிர் பிரிய தான் வாழ்வு.. ஒரு நாள் பிரியும்.. சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.. உன் குழந்தைகளை…