அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 36

பாலியம், கௌமாரம், யவ்வனம், வார்த்திகம் என்கிற அவஸ்தைகளுக்கு தக்கின பிரகாரம் நாடிகளின் சலனம் குறைந்து கொண்டே வரும். சுராதி ரோகங்கள் உண்டாகும் போது நாடிகளின் சலனமானது பேதப்படும். நாடிகள் வாயு சஞ்சாரத்தினால் சரீரத்தில் ரத்தத்தை வியாபிக்கச் செய்கின்றது. அந்த ரத்ததோஷத்தினால் அந்த நாடிகளில் ரத்தபரவல் பந்தகித்தால் அப்பொழுது நாடி சஞ்சரமாயும், வேகமாயும், துர்பலமாயும், க்ஷீணமாயும் நடக்கும். இரத்தத்தால் உஷ்ணமுண்டானால் நாடியானது அதிவேகத்துடன் சஞ்சலமாய் நடக்கும்.